தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் நடத்தி வருகிறார். அந்த பிரச்சாரக் கூட்டங்களின் போது திமுக அரசை கடுமையாக விமர்சிப்பதோடு தேர்தலில் மக்களுக்கு செய்யக்கூடிய புதிய வாக்குறுதி அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது சில வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 100 நாள் வேலைத்திட்டம் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சி அமைந்தால் அதனை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அதிமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் திருப்போரூரில் பரப்புரையின் போது எடப்பாடி பழனிச்சாமி இந்த வாக்குறுதிகளை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
