தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் கூட்டு குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.