தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான விஜய் அவர்கள் தீவிர அரசியலில் களம் கண்ட பிறகு, அவரது பெயரை ‘ஜோசப் விஜய்’ என்று கூறி சீமான் விமர்சனம் செய்திருந்தார். அதோடு, விஜய்யின் அரசியல் வருகையும், அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிட்டதன் பின்னணியிலும் மத அடிப்படையிலான வாக்குகளைப் பெறும் நோக்கமே ஒளிந்திருப்பதாகத் தொடர் குற்றச்சாட்டுகளை சீமான் முன்வைத்திருந்தார்.

சீமானின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ​அந்தக் காணொளியில் சீமானின் போலியான சாதி கடந்த அரசியலைத் தோலுரித்துக் காட்டியுள்ள சவுக்கு சங்கர், “தொடக்கத்தில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவித்த சீமான், திடீரென திருவொற்றியூர் தொகுதிக்கு மாறியது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

திருவொற்றியூரில் சீமான் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் அங்குப் போட்டியிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ​மேலும், நாங்குநேரி இடைத்தேர்தல் சம்பவத்தை நினைவுகூர்ந்த சவுக்கு சங்கர், அங்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை விட ஹரி நாடாரின் வேட்பாளர் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

அப்போது வெளியான காணொளி ஒன்றில், “அண்ணன் சீமானிடம் ஏற்கனவே நமது சமூகத்தைச் சேர்ந்த ஆள்தான் வேட்பாளராக நிற்கிறார் என்று பேசியதாக ஹரி நாடாரே வெளிப்படையாகக் கூறியிருந்தார்” என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

​ஒருபுறம் மேடைகளில் “தமிழனாக ஒன்றுபடுவோம்” என்று தம்பட்டம் அடித்துவிட்டு, மறுபுறம் முற்றிலும் சாதி மற்றும் சமூகக் கணக்குகளை மட்டுமே வைத்து சுயநல அரசியல் செய்யும் சீமான் அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சர் விஜய் அவர்களைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்ற ரீதியில் நெட்டிசன்கள் தற்போது இந்தச் காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.