கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது, பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை புகார் கூறியிருந்த நிலையில், கோவையை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.