அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து இன்று காலை 9 மணியளவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.