அந்நிய மனிதர்களிடம் சாதாரணமாகப் பேசுவது கூட ஏதோ மாரத்தான் ஓடுவது போல மனரீதியாகப் பெரும் சோர்வைத் தருகிறது என்று என் மகள் சொன்ன வார்த்தைதான் என்னை இதைச் செய்யத் தூண்டியது.
சமூக பதற்றத்தால் அவதிப்படும் தனது மகளின் நிலையைப் புரிந்து கொண்டு, கார் பயணிகளுக்காக உபெர் டிரைவர் கபீர் உருவாக்கிய விசித்திரமான ‘ரைடு மெனு’ கார்டு குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கானோரின் இதயங்களைத் தொட்டு உருக வைத்து வருகிறது.
கடுமையான 3 நாள் பிசினஸ் டூர் முடிந்து, உடல் மற்றும் மன ரீதியாகக் கடுமையான சோர்வுடன் விமானநிலையத்திலிருந்து உபெர் காரில் ஏறிய பெண் ஒருவருக்கு, காரின் சீட்டுக்கு பின்னால் லேமினேட் செய்யப்பட்ட விசித்திரமான கார்டு ஒன்று கிடைத்துள்ளது.
அதில் பயணிகள் தங்களுக்குத் தேவையான பணிச்சூழலைத் தேர்வு செய்யும் வகையில், அமைதியான பயணம், ஆலோசகர் பயணம், சுற்றுலாப் பயணம், ரேடியோ பயணம் ஆகிய 4 ஆப்ஷன்கள் இருந்ததைக் கண்டு வியந்த அந்தப் பெண், தனக்குத் தேவையான அமைதியான பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அதன்படியே டிரைவர் கபீர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஏசியின் அளவை மட்டும் மாற்றிவிட்டு அமைதியாகப் பயணத்தை முடித்த நிலையில், அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் கொடுத்த பெரிய டிப்ஸை வாங்க மறுத்தார் டிரைவர்.
தனது மகள் படும் சமூக பதட்டத்தின் அவஸ்தையை மற்ற பயணிகளும் படக்கூடாது என்பதற்காகவே இந்த மெனுவை உருவாக்கியதாகக் கூறிய நெகிழ்ச்சியான பின்னணி, சோசியல் மீடியாவில் வைரலாகி அனைத்து டாக்ஸி சேவைகளிலும் இந்த முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
i took a 45-minute uber ride home from the airport last night after a brutal, three-day business trip.
i was completely emotionally and physically drained, and my social battery was at absolute zero.
when i got into the car, the driver.. an older guy named kabir.. didn’t say…
— noor୨୧ (@wottheberry) June 6, 2026
“>
