நீட் தேர்வை எதிர்க்கும் ஒரு அரசு, அந்தப் போராட்டத்திற்குத் தடை விதிப்பது முரணானது என்றும், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
தவெக ஆட்சிப் பொறுப்பில் உள்ள தற்போதைய சூழலில், நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மீதே காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளன.
முந்தைய காலங்களில் எவ்விதத் தடையுமின்றி நடத்தப்பட்ட பெரியாரின் திராவிடக் கழகத்தின் நீட் எதிர்ப்பு மோட்டார் சைக்கிள் பேரணிக்குத் தற்போதைய அரசு அனுமதி மறுத்துள்ளது.
பெரியார் திடலைச் சுற்றிலும் காவல்துறை குவிக்கப்பட்டு, அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் கூடத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் கைது செய்வதுடன், அவர்களது கல்லூரி வகுப்பறைகளுக்கே சென்று தடுப்புக் காவல் என்ற பெயரில் நடவடிக்கை எடுப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முறையான அனுமதியைப் பெற்றுப் போராட்டம் நடத்தலாம் என்று அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு முறையான அனுமதி கோரப்பட்ட பின்னேயும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
A government that claims to oppose NEET should be standing in the frontlines of the resistance and not standing in its way.
Under the TVK government, the Dravidar Kazhagam’s anti-NEET motorcycle rally has been prohibited. The anti – NEET motorcycle rally happened previously in… pic.twitter.com/bGpuIsP8tu
— Yazhini PM (@yazhini_pm) July 30, 2026
“>
நீட் தேர்வை மத்திய அரசு மீது திணித்தவர்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய இயந்திரம், அதற்க எதிராகப் போராடும் மாணவர்கள் மீது பாய்வது எந்த விதத்தில் நியாயம் என்ற கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
