இயற்கையின் விதிகள் எப்போதும் மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. காடுகளிலோ அல்லது நாம் வாழும் நகரப்புறங்களிலோ விலங்குகளும் பறவைகளும் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உணவுக்காகவும் நடத்தும் போராட்டங்கள் பல நேரங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

பொதுவாக, காகங்கள் தங்களை விடச் சிறிய உயிரின வேட்டையாடுவதையோ அல்லது எலிகள் காகத்தைக் கண்டு அஞ்சி ஓடுவதையோ தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு வீடியோ காட்சி, இந்த இயல்பு நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

நடுரோட்டில் ஒரு காகமும் எலியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இந்த அரிதான விலங்குச் சண்டை, இணையவாசிகளை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், காகம் ஒன்று தன் அலத்தால் எலியைத் தாக்கி வேட்டையாட முயல்கிறது.

ஆனால், வழக்கமாக பயந்து ஓடும் எலிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அந்த எலி தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தைரியமாக எதிர்த்துப் போராடத் தொடங்குகிறது. காகம் தன் கூரிய அலக்கால் குத்த வரும்போதெல்லாம், அந்த எலி சற்றும் பயப்படாமல் காற்றில் எழும்பி காகத்தின் மீதே பாய்ந்து திருப்பித் தாக்குகிறது. வேட்டையாட வந்த காகத்திற்கு எலியின் இந்த எதிர்பாராத எதிர்த்தாக்குதல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஒரு கட்டத்தில் எலியின் இந்த ஆக்ரோஷமான வீரியத்தைக் கண்டு மிரண்டுபோன காகம், தன் முயற்சியைக் கைவிட்டுப் பின்வாங்கும் நிலை ஏற்படுகிறது. ‘தற்காப்பே சிறந்த தாக்குதல்’ என்பதற்குச் சான்றாக அமைந்த இந்த வீடியோ காட்சி, பார்ப்போரை உரைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

விலங்கு உலகத்தில் பசி மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டும் எந்த அளவுக்கு ஒரு உயிரினத்தை வீரம் உள்ளதாக மாற்றும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பொதுவாக காக்கை போன்ற புத்திசாலிப் பறவைகள் தங்களின் கூரிய பார்வை மற்றும் வேகத்தைப் பயன்படுத்தி எளிதில் இரையைப் பிடித்துவிடும்.

ஆனால், இந்த நிகழ்வில் தன் உயிரைக் காத்துக் கொள்ள எலி காட்டிய அசாத்திய தைரியமும் போராட்ட குணமும் நெட்டிசன்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. “வாழ்க்கையில் எவ்வளவு பெரிய எதிரி வந்தாலும் துணிச்சலுடன் எதிர்த்து நின்றால் வெற்றி பெறலாம்” என்ற மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கிய பாடத்தையும் இந்தச் சிறிய எலியின் போராட்டம் நமக்கு உணர்த்துவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.