சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி பிற்பகலில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 91080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஒரு கிராம் 11385 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை ஒரே நாளில் 1480 ரூபாய் வரையில் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.