தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளரையும் கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அதன் பிறகு இந்த வழக்கில் தொடர்புடைய புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பொன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஜாமின் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை நடத்தி வருவதால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மேலும் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி மணிகண்டன் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் தானாக சரணடைந்து முன் ஜாமீன் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
