தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதேசமயம் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் உழைப்பவர்களுக்கே கட்சியில் இடம், கணக்கமாக செயல்படும் பணிகளை துரிதப்படுத்துங்கள். கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.