திமுகவைச் சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சமீபத்தில் வெளியிட்ட கண்டன அறிக்கை ஒன்றுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் கேள்திகளும் எழுந்துள்ளன.
அரசியல் பிரமுகர் ஒருவர் அல்லது அவரது குடும்பத்தினர் குறித்தும், குறிப்பாக இணையத்தில் பரவும் கேலிகள் மற்றும் விமர்சனங்கள் குறித்தும் அமைச்சர் தங்களது நிலைப்பாட்டில் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு இளம் பிரமுகர் வேண்டுமென்றே தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியபோது அமைதியாக இருந்தவர்கள், தற்போது அதே நபர் மீதான இணைய விமரிசனங்களுக்கு மட்டும் கொதிப்படையலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக, பரிகோசம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ‘பாரிதாபங்கள்’ யூடியூப் சேனலின் வீடியோ மீது அரசியல் அழுத்தம் கொடுத்து அதை நீக்கச் சொன்னது எந்த விதத்தில் நியாயம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத் தேர்தல் பிரச்சாரங்களின்போது திமுக தரப்பிலிருந்து தவெக தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தினர் மீது அநாகரீகமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோது அமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை? அப்போது அவமதிப்புப் பேச்சுக்கள் கண்டிக்கப்படாதது ஏன் என்ற சரமாரியான கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக திமுகவின் இளம்தலைமுறையினர் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் சட்டமன்றத்தை ‘சோபா பேரவை’ என்று கேலி செய்து தவெக அமைச்சர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் இழிவுபடுத்தியபோது அமைச்சரின் அக்கறை எங்கு சென்றது?
சொந்தக் கட்சி உறுப்பினர்களின் ஆபாச மற்றும் தனிநபர் விமர்சனங்களைத் தட்டிக்க கேட்காதவர்கள், மற்றவர்களை நோக்கி அறநெறிப் பாடங்கள் எடுக்கத் தகுதியற்றவர்கள் என்று கடுமையாகச் சாடப்பட்டுள்ளது.
Dear TRB Raja, where were you for the last two months? Were you in a coma?
If you are genuinely concerned about a youngster being trolled online over his speech, then be consistent.
He is not a child who accidentally said something. He knew exactly what he was saying, and he… pic.twitter.com/HTEetax8tL
— TVK Pulse (@TVKpulse) August 1, 2026
“>
எதிர்க்கட்சிகள் அல்லது சாமானியர்கள் திமுகவை விமர்சிக்கும்போதெல்லாம் அமுக்க முயற்சிப்பதும், மிரட்டல் விடுத்துக் குரல்வளையை நெரிப்பதும் வழக்கமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ள தவெக ஆதரவாளர்கள், இதற்கு மக்கள் உரிய காலத்தில் வாக்குகள் மூலம் தக்க பதிலடி தருவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.
