75 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்ட கட்சியை ஒற்றை ஆளாக எதிர்கொண்டு வீழ்த்திய தமிழக முதல்வர் விஜய்யின் வழியில், அவரது மகன் ஜேசன் சஞ்சயும் தனது தெளிவான பேச்சின் மூலம் அரசியல் களத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் ஜேசன் சஞ்சய் அளித்த குறுகிய நேரப் பேட்டி ஒன்று தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
அந்த நேர்காணலில் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்ட முக்கியக் கருத்துக்கள் மற்றும் அதன் தாக்கங்கள்: தந்தை எப்போதும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவே வழிகாட்டினாரே தவிர, எதையும் தட்டட்டில் வைத்துப் புகட்ட நினைக்கவில்லை என்று ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளதன் மூலம், வாரிசு அரசியல் குறித்த எதிர்மறையான விமர்சனங்களுக்குத் தனது நேர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.
தன் சொந்த முயற்சியில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரது லட்சியம் பலரையும் ஈர்த்துள்ளது. தமிழக முதல்வரின் மகனாக இருப்பதில் உள்ள பெருமையை விட, அந்தப் பதவியும் பெயரும் சுமத்தும் பெரும் பொறுப்பை அவர் ஆழமாக உணர்ந்துள்ளார்.
மேலும், தனது குடும்பத்தினருக்கு நன்றியுணர்வுடன் இருப்பதையும், தனது சகோதரியுடனான சிறுவயதுச் சண்டைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதும் அவரது இயல்பான தன்மையைக் காட்டுவதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
Wow… A five-minute interview did what years of political narratives couldn’t.
Our leader, People’s CM Vijay, defeated a 75-year-old political party. And after watching this interview, I can confidently say his son, Sanjay, is just as dangerous in a different way.
In just a… pic.twitter.com/QVIkqwS0B6
— TVK Pulse (@TVKpulse) August 1, 2026
“>
பல ஆண்டுகளாகத் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பப் பின்னணியை அரசியலோடு இணைத்து திமுக தரப்பு கட்டமைத்து வந்த பிம்பத்தை, ஜேசன் சஞ்சயின் இந்த எளிய மற்றும் நேர்மையான பேட்டி முற்றிலுமாக உடைத்தெறிந்துள்ளது என்று தவெக தொண்டர்கள் இணையத்தில் வைரலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
