சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சமீபத்தில் ஆய்வு நடத்திய போது மெட்ரோ பயணிகளில் மாணவர்களின் பங்கு 40 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர பாஸ்போன்று மெட்ரோ பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காக சலுகை விலை பாஸ் விரைவில் வழங்கப்படும் என்றும் முதலில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.