இந்திய அரசியலில் எப்போதுமே மத்தியப் புள்ளியாகவும் அதேசமயம் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகவும் இருந்துவரும் ‘இந்து’ என்ற சொல் மற்றும் சனாதன தர்மத்தின் தோற்றம் குறித்துப் பரவலான வரலாற்று அலசல்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பழங்கால பாரதத்தின் தொன்மையான வேதங்கள், உபநிஷிடுகள், இதிகாசங்கள் மற்றும் சமணம், பௌத்தம் போன்ற ஆன்மீக நூல்களில் ‘இந்து’ என்ற சொல் இடம்பெறவில்லை என்ற வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த பூர்வகுடி மக்களைக் குறிக்க வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் பயன்படுத்திய சொக்கே காலப்போக்கில் ‘இந்து’ என்று மருவியதாகக் கூறப்படுகிறத.

இதில் பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் என அனைவரும் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற அடிப்படையில் அடங்குவர் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால படையெடுப்புகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் மற்றும் காலப்போக்கில் நிகழ்ந்த மதமாற்றங்கள் குறித்தும், சமூகத்தில் நிலவிய சாதியக் கட்டமைப்புகள் மற்றும் மனுநீதி போன்ற கோட்பாடுகள் குறித்த வரலாற்றுப் பார்வைகள் இந்த விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

காலங்காலமான வரலாற்றுக் கடந்து வந்த பாதைகள் எப்படி இருப்பினும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களையும் சமமாகவே பார்க்கிறது.

மதம், இனம் கடந்து இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம உரிமையையும், வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பெற்றுள்ளனர்.

“>

 

நாட்டின் இறையாண்மை, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பை எவராலும் மாற்ற முடியாது என்பதை இந்த விவாதங்கள் வலுவாக வலியுறுத்துகின்றன.