திருவாரூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாணவரணி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக சென்னையில் அடுத்த மாதம் நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்தார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.