தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது. அதேசமயம் கடந்து சில நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சித்திரை நிறைவடைய இருக்கும் நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் வெப்பம் 40 டிகிரி வரை போகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.