விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம் 8 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போய்ஜி கள்ளச் சாராயம் விற்று 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அமரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில், 2 காவல் ஆய்வாளர்களை உடனடியாக டிஜிபி சைலேந்திர பாபு சஸ்பெண்ட் செய்துள்ளார். அதன்படி மரக்காணம் ஆய்வாளர் அருள்வடிவேல் அழகன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மரியாசோபி மஞ்சுளா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாரயம் குடித்ததில், 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.