விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம் 8 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போய்ஜி கள்ளச் சாராயம் விற்று 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அமரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில்   தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை தலை தூக்க தொடங்கியுள்ளதாக இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாரயம் குடித்து 3 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அதிமுக ஆட்சியில், கள்ளச்சாராயம் இல்லாமல் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில், அது மீண்டும் தலைதூக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.