
புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, நம்மை உள்ளுக்குள்ளே இருந்து கரையானை போல இந்த சமூகத்தை கரைக்க வேண்டும் என நினைச்சு, அவுங்களோட முதல் ஆயுதமே மது. மது தான் இந்த சமுதாயத்தில் இன்றைக்கு திணிக்கப்பட்ட மிகப்பெரிய ஒடுக்குமுறை… இங்கு உள்ளே இருந்து இளைஞர்களை குடிக்க வச்சு…. குடிக்க வச்சு…. இளைஞர்களையும், ஆண்களை குடிக்க வச்சு வச்சு…
மன ரீதியா அவனை சிந்திக்க விடுவது கிடையாது… உடல் ரீதியாக எதிர்ப்பு சக்தி கிடையாது… கோபம் வருவது கிடையாது…. சமூக பற்று கிடையாது… இனப்பெற்று கிடையாது…. .ஒரு தேசப்பற்று கிடையாது…. எதுவுமே கிடையாது… அவர்கள் பிடித்து வைத்த மண் சிலையை போல் இருக்க வேண்டும்… அப்படி இருக்க வைக்க தான் முழுக்க முழுக்க அவர்கள் எடுத்த முதல் ஆயுதமே மது தான்…. டாஸ்மாக்கை கொண்டுவந்து, ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல…. நம்ம மக்கள் வாழ்கிற ஊருக்கு பக்கத்துல எல்லாம் வைக்கிறாங்க…
இவனை எப்படி நிறையா குடிக்க வைக்கிறது என்பதுதான். அதுக்குன்னு ஐஏஎஸ் ஆபிஸர் 10, 15 பேரு வேலை செஞ்சிட்டு இருக்காங்க. ஒவ்வொரு மாவட்டத்திலும் உட்கார்ந்துக்கிட்டு கலெக்டர்களுக்கு இதுதான் வேலை… ரெவன்யூ ஆஃபீஸருக்கும் இதுதான் வேலை. எப்படி இவர்களை குடிக்க வைக்கலாம் ? எல்லா சமூகத்தை விட இந்த சமூகத்தை குடிக்க வச்சு நாசமாக்கனும் என்பது ஒரு பெரிய சதி திட்டமாகவே இங்க போயிட்டு இருக்கு…
இதற்கெல்லாம் கணக்கில் கொண்டு தான் ஐயா அவர்கள் மீண்டும் மீண்டும் மதுவுக்கு எதிரான போராட்டம்… மதுவுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம் என எல்லாம் திரும்பத் திரும்ப செஞ்சுட்டு இருக்காங்க…. அதுபோல இப்ப நம்ம கடந்த ஒரு ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கிறோம் என பேசினார்.