செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக…. சென்னை மாவட்ட மக்கள்,  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் ….அதே போல தென் தமிழகத்தில் குறிப்பா தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி. தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியல.

நான் நேற்று மாலை வரைக்கும் தூத்துக்குடியில் தான் ஏரல் பகுதி மக்களை சந்தித்து வந்தேன். நேற்று முன்தினம் காயல்பட்டினம் போயிருந்தேன்.  நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் செல்ல இருக்கின்றேன். இன்னும் அவர்கள் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை. அரசு அதிகாரிகள்,,  அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு களத்தில் இருந்து நிவாரண பணிகள் எல்லாம் மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே அதை புரிந்து கொண்டு… மக்கள் எவ்வளவு பெரிய பாதிப்பை  அனுபவித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு,  நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்… நிதியமைச்சர் அவர்களுக்கும் நேற்று பதில் சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய வரியை தான் நாம் ஒன்றிய அரசுக்கு கொடுத்து இருக்கோம்.  எனவே தேவைப்படும் போது கொடுங்கன்னு மீண்டும் மரியாதையா கேட்டு இருக்கோம்.

நான் என்ன அநாகரிகமா பேசிட்டேன் ? என்ன வார்த்தை பேசினேன்  சொன்னீங்கன்னா ? நான் திருத்திக்கிறேன்…  அப்பங்குறது கெட்ட வார்த்தையா ? நான் தெரியாம தான் கேட்கிறேன்…  நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன். திரும்ப  மாத்திக்கிட்ட இல்ல…..  மரியாதைக்குரிய ஒன்றிய நிதி அமைச்சருடைய….மரியாதைக்குரிய அப்பா…. வணக்கத்திற்குரிய அப்பா… மாண்புமிகு அப்பா.. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என தெரிவித்தார்.