பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை செல்வம் மாதப்பன் இயக்கியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி உட்பட பலர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது படிக்காத படங்கள் படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. எப்போதும் கவர்ச்சி வேடத்தில் நடிக்கும் யாஷிகா ஆனந்த் இந்த படத்தில் சவாலான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான நடிப்பில் உருவாக்கியுள்ள படிக்காத பக்கங்கள் படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகி வருகிறது.