சமூக வலைதளங்களில் ஒரு கிங் கோப்ரா பாம்பு மரத்தின் மீது படம் எடுத்து ஆடிக்கொண்டிருக்க, அதை மூன்று நாய்கள் சுற்றி வளைத்துக் குறைக்கும் வீடியோ ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு நாய் பாம்பின் வாலைப் பிடித்து இழுக்க, மற்றொரு நாய் மின்னல் வேகத்தில் பாம்பின் முகத்திலேயே அட்டாக் செய்கிறது. இதைப் பார்த்த பலரும், “அந்த நாய்கள் உயிரோடு இருக்குமா?” என்றும், “பாம்பு கடித்தால் நாய் பிழைக்காதே” என்றும் கவலை தெரிவித்து வந்தனர்.
— Nature🍀🌸 (@NatureNexus4321) January 2, 2026
சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, உண்மையில் ஒரு ஏஐ (AI – Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஆகும்.
பாம்பின் செதில்கள் முதல் நாய்களின் அசைவு வரை அனைத்தும் அச்சு அசலாக நிஜம் போலவே இருப்பதால், பலரால் இது பொய் என்று நம்ப முடியவில்லை.
“தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துவிட்டதா? எது உண்மை எது பொய் என்றே தெரியவில்லையே” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இது போன்ற வீடியோக்கள் அதிகரித்துள்ள நிலையில், எதையும் தீர ஆராய்ந்த பின்பே நம்ப வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
