மக்களவையின் இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீரென அந்தத் பட்டியலை மாற்றி வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் மசோதாவை மத்திய பாஜக அரசு குறுக்கு வழியில் நிறைவேற்றியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாணவர் மீதான கொடூரத் தாக்குதல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியிலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தன.

இந்தச் சூழலில், மதியம் 2 மணிக்கு திடீரென நிகழ்ச்சி நிரலை மாற்றி எழுதிய மத்திய அரசு, வந்தே மாதரம் பாடலைத் கட்டாயமாக்கும் புதிய மசோதாவை அவையில் தாக்கல் செய்து அவசரகதியில் நிறைவேற்றியுள்ளது.

“>

 

நாடாளுமன்ற மரபுகளை மீறி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மறைக்கும் நோக்கில் பாஜக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.