உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் பள்ளி மாணவர்கள் ஒருவரைத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேதி கொத்வாலி பகுதிக்கு உட்பட்ட பராசௌலி சாலையில் பதிவான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்தச் செய்திக் காட்சிகளில், சில மாணவர்கள் சேர்ந்து மற்றொரு மாணவனைத் துரத்தித் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மோதல் நடக்கும்போது சுற்றிலும் ஏராளமான மாணவர்கள் இருந்தும், யாரும் அதைத் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பலரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

“>

 

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அமேதி கொத்வாலி காவல்துறையினர் உடனடியாகத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறைச் செயல்கள் இணையத்தில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.