சமூக வலைதளங்களில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ள நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஸ்கேட்டிங் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
<a href=”http://
View this post on Instagram
“>
அந்த வீடியோவில், அதிவேகமாக ஸ்கேட்டிங் செய்தபடி வரும் இளைஞர் ஒருவர், சாலையில் நின்று கொண்டிருக்கும் ஒரு லாரியின் அடியில் எவ்வித அச்சமுமின்றி படுத்துக் கொண்டே மறுபுறம் சீறிப்பாய்கிறார். இந்த வீடியோ, காண்போரை ஒரு நிமிடம் உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கனவே டெல்லி மற்றும் வங்கதேசம் போன்ற பகுதிகளில் இது போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், உயிரைப் பணயம் வைத்து ரிலீஸ்களுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய பொறுப்பற்ற செயல்களுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
