எல்லைப் பாதுகாப்பில் இரும்பு மனிதர்களாகச் செயல்படும் இந்திய ராணுவ வீரர்கள், சாதாரண மக்களிடம் எவ்வளவு கனிவானவர்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி.

ஒரு ரயில் நிலைய நடைமேடையில், வயதான மூதாட்டி ஒருவர் தான் தயாரித்த சமோசாக்களை ஒரு பாத்திரத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராணுவ வீரர்களின் சிறப்பு ரயிலில் இருந்து ஏராளமான வீரர்கள் கீழே இறங்கினர்.

பாட்டியின் கஷ்டத்தைப் பார்த்த ராணுவ வீரர்கள், ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகத்துடன் அவரிடம் ஓடிச் சென்றனர். போட்டி போட்டுக்கொண்டு அவரிடம் இருந்த அனைத்து சமோசாக்களையும் காசு கொடுத்து வாங்கினர்.

ஒரு சில நிமிடங்களிலேயே அந்த மூதாட்டியின் பாத்திரம் காலியானது. அந்தப் பாட்டியின் முகத்தில் தெரிந்த புன்னகையும், வீரர்கள் அவரிடம் காட்டிய மரியாதையும் காண்போரை கண் கலங்கச் செய்தது.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ராணுவ வீரர்களைக் கொண்டாடி வருகின்றனர். “எங்கள் வீரர்கள் ஆயுதத்தை மட்டுமல்ல, அன்பையும் ஏந்தத் தெரிந்தவர்கள்” என நெட்டிசன்கள் பெருமிதத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.