விலையுயர்ந்த கார்களில் செல்பவர்கள் பெரும்பாலும் மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் செல்வார்கள் என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால், அந்த எண்ணத்தை மாற்றியுள்ளது இந்த வைரல் வீடியோ.
சாலையில் ஒருவரது ‘அர்டிகா’ (Ertiga) கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
View this post on Instagram
அப்போது அந்த வழியாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் காரில் வந்த நபர், தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
தனது அந்தஸ்தைப் பார்க்காமல், பழுதான காருக்குப் பின்னால் நின்று அந்த நபர் காரைத் தள்ளி உதவி செய்தார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, ஒரே நாளில் பல கோடிப் பார்வைகளைப் பெற்று அந்த வீடியோ டிரெண்டிங்கில் உள்ளது.
“ஒரு கோடியில் கார் வாங்குவதை விட, ஒரு நல்ல மனதைப் பெறுவதே பெரிய விஷயம்” என அந்த நபரை நெட்டிசன்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
