ஆமை என்றாலே பொறுமைக்கும், மந்தமான நடைக்கும் தான் பெயர் பெற்றது. ஆனால், தற்காலத்து ஆமைகள் மிகவும் ‘ஆக்டிவ்’ ஆக மாறிவிட்டன என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி.
ஆமை ஒன்றைச் சாதாரண உயிரினம் என நினைத்த நாய் ஒன்று, அதைத் தாக்க முயன்றுள்ளது. ஆனால், அந்த ஆமை யாருமே எதிர்பார்க்காத ஒரு காரியத்தைச் செய்தது. தன் வாயால் அந்த நாயின் நாக்கைத் தேடிப் பிடித்து ஆவேசமாக இழுக்கத் தொடங்கியது.
कछुये ने सिखाया कुत्ते को सबक.. 🐕😱😱
आपने ऐसा वीडियो कभी नहीं देखा होगा😮😱
Horryfying 😱😱😯 Video pic.twitter.com/LKMXnwC5cX
— Prisha (@pki42) January 3, 2026
தனது பலத்தைக் காட்டப் போன நாய், ஆமையிடம் நாக்கைப் பறிகொடுத்துவிட்டு வலியால் துடிப்பதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“முயலையே ஜெயித்த ஆமைக்கு, இந்த நாய் எம்மாத்திரம்?” எனப் பலரும் கிண்டலடிக்கின்றனர். “பார்க்க மெதுவாகத் தெரிந்தாலும், ஆமையின் புத்திசாலித்தனம் நாயின் வேகத்தையே முடக்கிவிட்டது” எனச் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சுமார் 31 ஆயிரம் பேருக்கும் மேல் பார்த்துள்ள இந்த வீடியோ, தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
