சாகசம் செய்கிறேன் என்று ஒரு நபர் ஆற்றில் இறங்கி தனது நண்பர்களுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். ஆற்றுத் தண்ணீரை வாயில் அடித்து ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த அவருக்கு, காலடியில் ஏதோ ஒன்று உரசும் உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஏதோ பெரிய மீன் தான் சிக்கியிருக்கிறது என்று நினைத்த அந்த நபர், உடனே தண்ணீருக்குள் கையை விட்டு அதை லாவகமாகப் பிடித்தார். ஆனால், கையில் பிடித்து மேலே தூக்கிய பிறகுதான் தெரிந்தது, அது மீன் அல்ல; ஒரு முதலைக் குட்டி.

தன் கையில் இருப்பது முதலை என்று தெரிந்ததும் அந்த நபரின் முகம் அப்படியே வெளுத்துப் போய்விட்டது. அலறியடித்துக் கொண்டு அந்த முதலையைத் தண்ணீரில் வீசிவிட்டு, மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று அருகில் நின்ற படகின் மீது ஏறினார்.

பார்ப்பதற்கு ஏதோ ஹாலிவுட் த்ரில்லர் படக் காட்சி போல இருந்த இந்த வீடியோ, தற்போது எக்ஸ் (X) தளத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. “சாகசம் நல்லதுதான்.. ஆனா இப்படியா?” என நெட்டிசன்கள் அந்த நபரைக் கிண்டலடித்து வருகின்றனர்.