தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய காயத்திரி ரகுராம் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தினார்.  அவருக்காக ஆதரவான முக்கிய நிர்வாகிகளை வைத்து கட்சிக்கு எதிரானவர் போல் மனநிலையை உருவாக்கி கட்சியிலிருந்து நீக்குகிறார் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள கல்யாணராமன், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொது செயலாளரும், தமிழக எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று இரவு 7.47 மணிக்கு தனது twitter பக்கத்தில் போஸ்ட் போட்டு இருந்தார். அதே போஸ்டருக்கு பதிலளிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி,  குறிப்பாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டிய அண்ணாமலை ஆதரவாளர் என அறியப்படும் செல்வகுமார் என்பவர்,

https://twitter.com/Selvakumar_IN/status/1612855806625734658

கல்யாணராமன் அதிமுகவில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள் எங்கிருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார் என நம்புகிறேன் என 10.26 மணிக்கு அதே பதிவை டேக் செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் 10:37க்கு பாஜக ஆதரவாளர் என கருதப்படும் கிஷோர் கே சாமி, சம்பந்தப்பட்டவர் மரியாதை நிமித்தமான சந்திப்புன்னு சொல்றாரு.

மாநில பொறுப்பில் இருக்கிறவரை இப்படி பதிவு போட சொல்லி அண்ணாமலை நிர்பந்திக்கிறார். தன் அரசியல் அழிவை தானே தேடிக் கொள்கிறார் அண்ணாமலை. இதுக்கு மேல சொல்றதுக்கு ஏதுமில்லை என ட்ரீட் செய்து உள்ளார். இது தற்போது தமிழக அரசியல் பெரும் விவாதத்தையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.