சென்னைக்கு நாள்தோறும் வேலை, கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ரயிலில் வருகிறார்கள். இதன் காரணமாக திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினசரி எலக்ட்ரிக் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் வழக்கமாக 9 பெட்டிகள் வரை இருக்கும் நிலையில் ஒரு சில ரயில்களில் 12 பெட்டிகள் வரை இருக்கிறது.

இந்நிலையில் முக்கிய வழித்தடங்களில் 500 ட்ரிப் எலக்ட்ரிக் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பதால் இட பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளுவர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்கள் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இனி 12 பெட்டிகளுடன் இயங்கும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பால் ‌ கூட்ட நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.