சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பான வீடியோ வெளியாகி, இணையவாசிகள் மத்தியில் திகிலையும் விவாதத்தையும் கிளப்பியது.
ஒரு வனச் சுற்றுலா (Jungle Safari) வாகனத்தில் இருந்த பெண் ஒருவர், ‘செல்பி’ எடுப்பதற்காகக் கையை வெளியே நீட்டும்போது, சிங்கம் ஒன்று திடீரெனப் பாய்ந்து வந்து அவரது கையைப் பிடித்து வெளியே இழுத்துச் செல்வதுபோல் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
— Photographer (@photo5065) November 8, 2025
இந்த வீடியோ பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலான நிலையில், வனச் சுற்றுலாக்களின் பாதுகாப்பு குறித்துப் பலரும் கேள்வி எழுப்பினர். இருப்பினும், பல பார்வையாளர்கள் இந்த வீடியோ போலியாக இருப்பதாகச் சுட்டிக் காட்டினர்.
உண்மையில், வனச் சுற்றுலா வாகனத்தில் இருந்த ஒரு பெண்ணைச் சிங்கம் தாக்கி இழுத்துச் செல்லும் இந்தச் சம்பவம் உண்மை அல்ல. இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலியான வீடியோ ஆகும்.
‘போட்டோ 5065’ என்ற X பயனர் கணக்கில் நவம்பர் 8, 2025 அன்று வெளியான இந்தக் காட்சி, ஒரு சிங்கம் பெண்ணின் கையைப் பற்றிக்கொண்டு அவரை ஓடும் வாகனத்தில் இருந்து இழுத்துச் செல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களிடம் பீதியைக் கிளப்பியிருந்தாலும், இது உண்மைக்குப் புறம்பானது என்று உண்மைச் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
