சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் இதயத்தைப் பதற வைக்கிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் வாசலில் தொங்கிக்கொண்டிருக்கிறார். உள்ளே இருந்த பயணிகள் அவரைப் படமெடுக்க, அடுத்த நொடியே அவர் தன் உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலிலிருந்து கீழே குதிக்கிறார்.

மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அவர் குதித்த பின்னரும் எந்தச் சேதமும் இன்றிப் பத்திரமாகத் தரை இறங்கி நிற்கிறார். சுமார் மணிக்கு 50 முதல் 70 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இவர் குதித்தபோதும், காயமின்றி தப்பித்தது பார்வையாளர்களைத் திகைப்படைய வைத்துள்ளது.

அந்த இளைஞர் ரயிலின் கைப்பிடியைப் பிடித்துச் சமநிலைப்படுத்திக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த பயணிகள் பயத்தில் அவரைத் தடுக்க முயல்கின்றனர். ஆனால், அவர் அவர்களைப் பொருட்படுத்தாமல், கேமராவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “வீடியோ எடுங்கள், நான் இறங்கிவிடுவேன்” என்று தைரியமாகச் சொல்கிறார்.

சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், திடீரென அவர் கீழே குதிக்கிறார். கீழே குதித்த சில விநாடிகளுக்குப் பிறகு, அவர் ஓடும் வேகத்துக்கேற்ப ஓடி, பிறகு பத்திரமாகத் தரையில் நிற்கிறார்.

இந்த அதிபயங்கர ஸ்டண்டைப் பார்த்த நெட்டிசனன்கள், “இவர் இயற்பியல் வகுப்புகளைத் தவறவிட்டதில்லை என்று நினைக்கிறேன்!” என்றும், “இவரை இப்போது நாசாவின் ஆட்கள் தேடுகிறார்கள்!” என்றும் பலவிதமான நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.