தமிழக முதல்வர் விஜய் இன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக இத்தனை வருடங்கள் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் சாதித்து தற்போது முதலமைச்சர் ஆக முதல் பிறந்தநாளை கொண்டாடுவதால் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் சட்டசபையிலும் சில உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தற்போது சுயேட்சை எம்எல்ஏவாக இருக்கும் மன்னார்குடி காமராஜ் சட்டசபையில் பேசும்போது கிட்டத்தட்ட எட்டு முறை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் பேசும்போது இடையிடையே சபாநாயகர் குறிப்பிட கடைசியில் காமராஜ் பேசும் போது அவையே சிரிபலையில் மூழ்கியது. மேலும் முதலமைச்சர் விஜயும் அவர் பிறந்த நாள் வாழ்த்து கூற கூற சிரித்தது கவனத்தை எடுத்துள்ள நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது
#WATCH | மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் பேசும்போது இடையிடையே குறுக்கிட்ட சபாநாயகர், உறுப்பினர்கள்.. இறுதியாக பேசும்போது காமராஜ் கூறிய வார்த்தையால் அவையில் சிரிப்பலை#SunNews | #TNAssembly | #Mannargudi pic.twitter.com/ZqhGdaQ9Th
— Sun News (@sunnewstamil) June 22, 2026
