தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் டம்ளரில் தண்ணீர் கொடுப்பதால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அதிக பணி சுமை ஏற்படுவதாக கூறினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீர் கேட்க கொண்டு வருவதை பார்க்கும் போது நமக்கே ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கிறது எனவும் எனவே வாட்டர் பாட்டிலில் ஒவ்வொருவருக்கும் தண்ணீர் வைத்து விட்டால் அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் கூறினார்.
அதோடு முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளில் இந்த கோரிக்கையை தான் முன்வைப்பதாகவும் வாட்டர் பாட்டிலில் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் கண்ணாடி பாட்டில் உபயோகப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
அப்போது குறிக்கிட்ட ஓபிஎஸ் வாட்டர் பாட்டில் வேண்டாம் அது சரியாக இருக்காது ஏனெனில் கோபம் வந்தால் உறுப்பினர்கள் தூக்கி அடித்து விடுவார்கள் என்றார். அதற்கு பதிலடி கொடுத்த பிரேமலதா கோபம் வந்தால் டம்ளரை தூக்கிக்கூட அடிக்கலாம். மேலும் கட்டாயம் ஒரு தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும் இதனால் அரசுக்கு எந்தவிதமான கூடுதல் நிதி சுமையும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தினார். இவர்கள் பேசும்போது அவையே சிரிப்பலையில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
#WATCH | “அவையில் வாட்டர் பாட்டில் வேண்டாம். ஏனென்றால்..”
தேமுதிக உறுப்பினர் பிரேமலதாவின் பரிந்துரைக்கு திமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த கமெண்ட்.. பேரவையில் கலகலப்பு#SunNews | #TNAssembly | #PremalathaVijayakanth | #OPanneerselvam pic.twitter.com/KUk5J9T5II
— Sun News (@sunnewstamil) June 22, 2026
