அமெரிக்காவில் தச்சு வேலை செய்யும் ஒருவரின் மாத வருமானம், படித்து முடித்துவிட்டு வேலை தேடும் பட்டதாரிகளின் பட்டயங்களையே கிழித்தெறியத் தூண்டும் வகையில் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என வெளியிட்டுள்ளது.
மேலும் அங்கு தச்சுத் தொழிலில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வெறும் நான்கு ஆணிகளை அடிப்பதற்கு மட்டுமே இந்திய மதிப்பில் சுமார் 10,000 ரூபாய் வரை கூலியாக வழங்கப்படுகிறது. இந்த கணக்கின்படி பார்த்தால், ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் உழைத்தாலே லட்சக்கணக்கில் பணம் கொட்டுகிறது.
चार खिळे ठोकण्यासाठी तासाचे मिळतात १० हजार, अमेरिकतला कार्पेंटर महिन्याला किती कमावतो? कमाईचा आकडा आपली डिग्री फाडाल https://t.co/rPuy6FMMLp
“>
இதனால் இந்தியாவில் பல வருடங்கள் கஷ்டப்பட்டு பெரிய பட்டங்களைப் படித்துவிட்டு, மாத இறுதியில் சில பத்தாயிரங்கள் வாங்குவதற்கே திணறும் இளைஞர்களின் நிலைக்கு மத்தியில், அமெரிக்க தச்சர்களின் இந்த பிரம்மாண்ட வருமானம் ஒட்டுமொத்த உலகையும் வாயடைக்க வைத்துள்ளது.
இந்த அதிரடி வருமானத்தின் பின்னணியில் அமெரிக்காவின் கடுமையான உழைப்புச் சந்தையும், திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் முறையும் மறைந்துள்ளது. அங்கு உடல் உழைப்பு சார்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், தங்களின் தச்சு வேலைகளுக்காக மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி வாரி வழங்கத் தயாராக இருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் ஒரு தச்சரின் மாத சம்பளம் பல லட்சங்களைத் தாண்டி, கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் சம்பளத்தையே முந்தும் அளவிற்கு எகிறியுள்ளது. ஏட்டுக் கல்வியை விட, கையில் இருக்கும் தொழிலே ஒருவரை கோடீஸ்வரராக்கும் என்பதை இந்த அமெரிக்க தச்சரின் மாத வருமானம் ஆணித்தரமாக நிரூபித்து, சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலை கிளப்பியுள்ளது.
