சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வினோதமான திருமண வழக்கு ஒன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு வாலிபருக்கு ஆன்லைன் மூலமாக ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் அவருடன் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வீடியோ காலில் பேசிய அந்த வாலிபர், உடனடியாக அவரைத் திருமணம் செய்யச் சம்மதித்துள்ளார். சம்மதம் தெரிவித்த மூன்றே நாட்களில், சுமார் 36 லட்சம் ரூபாய் வரதட்சணை மற்றும் திருமணச் சடங்குகளுக்காகப் பெருந்தொகையைச் செலவழித்து ஆடம்பரமாகத் திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திருமணமான ஒன்பதாவது நாளிலேயே அந்தப் பெண்ணின் உண்மை முகம் மற்றும் சில ரகசியங்கள் கணவனுக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.
மேலும், தான் திருமணத்திற்காகச் செலவு செய்த 36 லட்சம் ரூபாய் பணத்தையும், வரதட்சணையையும் அந்தப் பெண் திரும்பத் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
