கிழக்கு லண்டனில் உள்ள ஒரு நதிப்பகுதி பல ஆண்டுகளாகக் குப்பைகளாலும், அசுத்தங்களாலும் இருந்த நிலையில், பால் பவுல்ஸ்லேண்ட் என்ற 40 வயது சுற்றுச்சூழல் வழக்கறிஞர், உள்ளூர் தன்னார்வலர்களைத் திரட்டி 10 நாட்கள் கடுமையான உழைப்பின் மூலம் 200-க்கும் மேற்பட்ட மூட்டை குப்பைகளை அப்புறப்படுத்தி அந்த நதியை மீட்டெடுத்துள்ளார்.

இதன் விளைவாக, பல தசாப்தங்களுக்குப் பிறகு அந்த நதியில் மீன்கள், தும்பிகள் மற்றும் பறவைகள் மீண்டும் வாழத் தொடங்கிய நெகிழ்ச்சியான புகைப்படங்களை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனால், இந்த மாசற்ற மனிதாபிமான செயலுக்குப் பாராட்டு தெரிவிப்பதற்குப் பதிலாக, “அரசாங்கத்திடம் முறையான அனுமதி பெறாமல் நதியைத் தூர்வாரினீர்கள்” என்று கூறி லண்டன் சுற்றுச்சூழல் வாரியம் அவர் மீது விசித்திர விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், இதில் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

<a href=”http://

“>

பில்லியன் கணக்கான லிட்டர் கழிவுகளை ஆற்றில் கொட்டும் பெருநிறுவனங்களை விட்டுவிட்டு, நதியைச் சுத்தம் செய்த தங்களுக்கு எதிராகச் சட்டம் பாய்வதைக் கண்டித்து பால் பதிவிட்டுள்ள சூழலில், “அரசாங்கம் செய்யத் தவறியதைச் செய்த இந்த நிஜ வாழ்க்கை ஹீரோக்களைக் கோர்ட்டுக்கு இழுப்பது வெட்கக்கேடானது” என்று உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் லண்டன் அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.