தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளான இன்று, தலைமைச் செயலகத்தில் அவர் கேக் வெட்ட மறுத்துவிட்டதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தலைமைச் செயலகத்திற்கு மிகவும் பிரத்யேகமான ஸ்பெஷல் கேக் ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது. ஆனால், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கேஸ் லீக் விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் காரணமாக, முதல்வர் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

​பாதிக்கப்பட்ட மக்களின் துயரமான சூழலை மனதில் கொண்டு, தலைமைச் செயலகத்தில் கேக் வெட்ட முதல்வர் விஜய் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, அங்கு கொண்டு வரப்பட்ட ஸ்பெஷல் கேக் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டது. திருவள்ளூர் கேஸ் லீக் விபத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, முதல்வர் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை முழுமையாகப் புறக்கணித்து, விபத்து குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகத் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.