தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு காரசாரமாக பதிலடி கொடுத்து வருகிறார். அப்போது கட்சி டாஸ்மாக் நிதி தொடர்பான விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து திமுக உடனடியாக அவையை விட்டு வெளியேறியது.
இதற்கு முன்னதாக அமைச்சர் ராஜமோகன் பேசும்போது அந்தப்பக்கம் இருந்து ஏய் என்று தவெக எம்எல்ஏக்களை பார்த்து ஒருமையில் பேசுகிறார்கள். திமுகவினர் இப்படி மரியாதை இல்லாமல் பேசுவது சரியல்ல இதனை அவை குறிப்பிடுவது நீக்க வேண்டுமென்றார். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் இதெல்லாம் அவை குறிப்பில் சேர்க்கப்படாது என்றார். மேலும் முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் சபைக்கு என்று ஒரு மரபு இருக்கிறது எனவும் அதனை மூத்த உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
#JustNow || தவெக எம்எல்ஏக்களை ஒருமையில் பேசுகின்றனர் திமுக எம்எல்ஏக்கள் – ராஜ்மோகன்
முதலமைச்சர் விஜய் பேசும் போது குறுக்கீட்டிற்கு அனுமதி இல்லை.. திமுக எம்எல்ஏக்களை எதிர்கட்சி தலைவர் அமைதிப்படுத்த வேண்டும்.. – சபாநாயகர்#Tamilnadu | #Chennai | #Secretariat | #TNGovt |… pic.twitter.com/LuYtB6xhXq
— Polimer News (@polimernews) June 23, 2026
