தமிழகத்தில் இன்று சட்டசபை கூட்டத் தொடர் காலை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஆளுநர் உரைக்கு பதில் வழங்கும் தீர்மானத்தின் போது முதலமைச்சர் விஜய் அனைத்து விமர்சனங்களுக்கும் காரசாரமான பதிலடி கொடுத்த நிலையில் 40 நாட்களில் என்ன செய்தோம் என்று தெளிவாக பேசினார். அதோடு போதைப்பொருள் டாஸ்மாக் ஊழல் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர் அம்பேத்கரின் கனவு நிறைவேறிவிட்டதாகவும் எட்டு பட்டியலின் அமைச்சர்கள் எங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர் என்றும் பெருமிதமாக கூறியதோடு நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என்பதனால் தான் கூட்டணி ஆட்சி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியை மறைமுகமாக குறிப்பிடும்போது முதலமைச்சர் விஜய் அரசு சொல்வதாக குறிப்பிட்டுவிட்டு நம்மை மறைமுகமாக ஈவில்ஸ் சென்று அழைக்கிறார்கள். இந்த வார்த்தையை டெவில்ஸ் கூறக்கூடாது என்றார். அதோடு திமுக உறுப்பினர்கள் இருக்கும்போதே நான் ஒரு ஆக்ஷன் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அவர்கள் கிளம்பிவிட்டனர் இப்போது செய்யவா என்று சபாநாயகரிடம் பர்மிஷன் கேட்க அவர் செய்யலாம் என்றார். உடனடியாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எல்லாம் முடிந்து விட்டது என்ற வைரல் ரியாக்ஷனை விஜய் செய்து காட்டினார். மேலும் அப்போது அவையே மிகவும் உற்சாகத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் செய்த Action #Assembly #CMVijay #VihayAction #VijayViral #News18TamilNadu
▶️WATCH NOW || https://t.co/nKfy0at4qg pic.twitter.com/uj4sLjBIdF
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 23, 2026
