தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து பல வருடங்கள் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா அதிலிருந்து மீண்டும் மீண்டு திரைப்படத்தில் நடிக்க வந்த நிலையில் இயக்குனர் ராஜ் நிதிமோருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது நடிப்பில் சமீபத்தில் எங்கள் தங்கம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை நடிகை சமந்தா கேக் வெட்டி கொண்டாடும்போது பேபி பம்ப் வெளிப்பட்டது.
நடிகை சமந்தாவை அவருடைய கணவர் அந்த நேரத்தில் மிகவும் கவனமாக அழைத்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் தற்போது எங்கள் தங்கம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிவி நந்தினி ரெட்டி நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஏற்கனவே படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது நடிகை சமந்தாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இதன் காரணமாக தற்போது ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
