“ஐயோ, என்னோட வயசு என்ன, உங்களோட வயசு என்ன.. நீங்க போய் இப்படி என் கால்ல விழுகலாமா , இப்படிலாம் பண்ணக்கூடாது!” என்று பதறியபடி தடுத்து நிறுத்தியதுடன், பதிலுக்கு அந்தத் தூய்மைப் பணியாளரின் காலில் விழுந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆசி பெற்ற நெகிழ்ச்சியான விசித்திரச் சம்பவம் சேலம் அருகே ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் நெகிழ வைத்துள்ளது.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் வீராணம் பகுதியில் தவெக சார்பில் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது; இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஏழை எளிய தூய்மைப் பணியாளர்களுக்குப் நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வழங்கியபோது, ஆண்  தூய்மைப் பணியாளர் ஒருவர் நன்றிக்கடனாக அமைச்சரின் காலில் விழ முயன்றார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவரைத் தடுத்து நிறுத்திய அமைச்சர், அவரது பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற்ற மாபெரும் அரசியல் நாகரிகம், அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களிலும் தற்பொழுது காட்டுத்தீயாகப் பரவிவருகிறது.

“>