“70 வருஷமா மேடைக்கு மேடை பெண்கள் முன்னேற்றம்னு வெட்டி வாய்ப் பேச்சு பேசுறீங்களே, முதல்ல உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே தமிழ்நாட்டுல அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?”
என்று திமுகவின் குடும்ப அரசியலையும் வாரிசுப் பூசலையும் தவெக அமைச்சர் கீர்த்தனா மிக ஓப்பனாக உடைத்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் மாபெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
70 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் பெண்கள் முன்னேற்றம் என்பது ஏமாற்றமாக மட்டுமே இருந்த நிலையில், தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் ஆட்சியில் அமர்ந்த 30 நாட்களிலேயே சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாகச் சட்டமன்றச் செயலாளராக ஒரு பெண்ணை நியமித்ததோடு, அமைச்சரவையில் 4 பெண்களுக்கு மாபெரும் அதிகாரப் பதவிகளை வழங்கியுள்ளார் எனக் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் ஒரு பெண் கவுன்சிலராக இருந்தால் கூட அவரது கணவர்தான் போன் எடுப்பதும் கையெழுத்திடுவதுமாகப் பினாமி வேலைகள் நடந்ததாகச் சாடிய அவர், திமுகவில் தாராளமாக வஞ்சிக்கப்படும் அத்தனை பெண் நிர்வாகிகளும் தங்களுக்கு உண்மையான மரியாதை கிடைக்கும் அங்கு உடனே ஓடி வந்துவிடுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
