தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என்று திமுக கட்சியினரின் சொத்து மதிப்புகளை வெளியிட்டார். திமுகவின் சொத்துக்களை DMK files என்ற பெயரில் அண்ணாமலை இன்று வெளியிட்டதோடு பார்ட் 2 விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்தார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறினார். கடந்த 1967-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக என இரு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளது.

ஏற்கனவே திமுகவின் சொத்து மதிப்புகளை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், அடுத்ததாக அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளிவரும் என அண்ணாமலை கூறியதால் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என சூசகமாக அவர் தெரிவித்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சலசலப்புகள் நிலவும் நிலையில் தற்போது அண்ணாமலை இப்படி ஒரு கருத்தை சொல்லி இருப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நான் 10 முறை தொடர்ந்து தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஊழல் குறித்து தொடர்ந்து பேசுவேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.