தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் மற்றும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளையில் முக கவசம் அணிவது கட்டாயம் என உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் நீதிமன்ற வளாகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.