சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வருவதற்கான சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால் புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வருவதற்கான சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால் புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள சூயஸ் ஆய்வு களம் 22-ல் இருந்து குளிரூட்டும் போது கடந்த மாதம் அதிக அளவு கசிந்து விட்டது. எனவே அந்த விண்கலத்தை பயன்படுத்தி அங்கிருக்கும் வீரர்களை பூமிக்கு திரும்பி அழைத்து வருவது சாத்தியமா என்பது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து பகுப்பாய்வு செய்து அதில் சூயஸ் 22 விண்கலம் பூமிக்கு திரும்பும் போது வளிமண்டலத்தில் உராய்வுவதால் ஏற்படும் வெப்பத்தை உள்ளே இருக்கும் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது தெரியவந்துள்ளதாம்.

எனவே ஆய்வாளர்களை ஏற்றிக் கொண்டு வரும் மார்ச் மாதம் அனுப்பப்படுவதாக இருந்த சூயஸ் 23 விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் அனுப்ப முடிவு செய்துள்ளதாக ரஷ்யா கூறுகின்றது. வரும் இருபதாம் தேதி விண்ணில் ஏவப்படும் சூயஸ் 23 சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப அழைத்து வரும் என்று ரஷ்ய விண்வெளி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அந்த விண்வெளி நிலையத்தில் இருக்கும் பழுதடைந்த சூயஸ் 22 களம் காலியாகவோ விண்வெளி நிலையத்தில் இருந்து சில பொருட்களை ஏற்றிக்கொண்டு பூமிக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.