தைவான் நாட்டில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென மொபைல் போன் சார்ஜர் வெடித்து தீ பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் நாட்டில் இருந்து விமான சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் சார்ஜர் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமான பணி பெண்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சார்ஜரின் உரிமையாளர் மற்றும் அவரின் அருகே அமர்ந்திருந்த நபர் என இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீயை அணைத்த பின்னர் விமானத்தில் முழு சோதனை நடத்தப்பட்ட பின்னர் இயக்கப்பட்டது.