கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் அருகே குப்பச்சிபாறையில் கிருஷ்ணன், மது என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு ஜெய் கிஷோர் (16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜெய் கிஷோர் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்து உள்ளார். இதனை தாய் மது கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜெய் கிஷோர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல்கள் வழங்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் ஜெய்கிஷோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.